திருமணம் எதற்காக?
திருமணம்தான் கெத்தா ?
********************************
இதில் ஒரு சில வரிகளில் பதில் சொல்லி புரிய வைத்தல் மிகவும் கடினம்
முதலில் திருமணம் என்பது எதற்கு ?
வம்சத்தை வளர்ப்பதற்காக? அல்லது
உங்களது பரம்பரை சொத்தை காப்பாற்றுவதற்காக?
பரம்பரை பரம்பரையாக கட்டிக் காத்த சாதியை நிலை நாட்டுவதற்காக?
இல்லை மனம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மட்டுமே!
என்பதை உளவியல் ரீதியாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!
இருந்தாலும் சிறிய ஒரு உதாரணத்தை சொல்கிறேன்
என்னுடன் கல்லூரியில் படித்த வர்களின் எண்பது சதவீதம் பேர் மனம் முறிவுடன் தான் வாழ்கின்றனர் மீதமுள்ள 20 சதவீதம் பேரும் ஆணோ பெண்ணா வேண்டா வெறுப்பாக தான் வாழ்கின்றனர் அதற்காக குடும்பம் வேண்டாம் என்று அர்த்தம் அல்ல
ஆடம்பரமாக திருமணம் செய்வது பிறருக்காகவே வாழ வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியது சூழ்நிலை உள்ளது
திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக பெரும் வியாபாரமும், சாதிகளும் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
நமது பண்பாடு கலாச்சாரம் கட்டிக் காக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் காலத்திற்கு ஏற்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களுடன் வாழ்ந்தாக வேண்டும் குடும்பம் என்ற ஒரு பின்னணி சமுதாயத்தில் நன்றாக வாழ அவசியம் தான்
ஆனால் இன்றைய வழக்குகள் பெரும்பாலும் அண்ணன் தம்பிக்குமான சொத்து வழக்குகள் அதிகமாக உள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அடுத்ததாக குடும்பத்திற்குள் ஏற்படும் சிறு மன கசப்புகள் கூட பெரும் தீங்கு விளைவிக்கும் அளவிற்கு இருப்பதை நம்மை சுற்றி உள்ளவர்கள் வாழும் வாழ்க்கை முறையை பார்த்தாலே தெரியும்.
ஆகையால் குடும்பம் என்பது எத்தனை நபர்களைக் கொண்டது என்றது தீர்மானிக்க வேண்டியது அவசியம்
திருமணம் ஆனவுடன் தாய் தந்தையை விட்டு செல்கிறான் என்று சொல்வதெல்லாம்
திருமணத்திற்கு செய்த செலவுகளை மீட்டெடுப்பதற்காகத்தான்.
உங்கள் மீது பாசத்தினால் அல்ல
திருமணமான உடன் எத்தனையோ குடும்பங்கள் இரண்டாக பிரிந்து இருக்கிறது ஏன்?
மிக ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்கிறோம் குழந்தை இல்லை என்றால் ?
அவர்கள் சரியாக வாழவில்லை என்றால்?
அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனை என்றால்?
பெரிதுபடுத்தி பிரித்து வைக்கும் சூழ்நிலையை பார்க்கிறோம்?
நாம் சொந்தங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஏன்?
எது மகிழ்ச்சி என்று நம் மனதில் பிம்பம் வைத்திருக்கிறோமோ
அதுவே துயரம் தான்!
திருமணம் ஆனவுடன் அவன் தனியாக வாழ துவங்க வேண்டும்
சமுதாயத்தில் சாதிகள் ஒழிய
ஆடம்பர திருமணங்கள்
முற்றிலுமாக ஒழிந்தாக வேண்டும்.
திருவிழாக்களில் பெருமையாக சொல்லப்படும் தலைக்கட்டு
பூசைமுறைகள் படிக்கட்டுகள்,என்று பழைய வழக்க பழக்கவழக்கங்களை உடைத்தெரியாமல்
நீங்கள் சமுதாயத்தில் நிம்மதியாக வாழ முடியாது.
பழைய பழக்கவழக்கங்கள் என்று இருந்தால் நாம் பண்டைய காலத்தில் தான் வாழ வேண்டும் !
இது
எனது பூர்வீக வீடு
எனது பூர்வீக இடம்
எனது பூர்வீக கோயில்
எனது பூர்வீகம்
என்று பூர்வீகம் பழக்க வழக்கங்களை பேசிக்கொண்டு சேரிலே குடியிருந்தால் மாற்றம் காண்பது எப்போது?
திருமணம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் இருக்கிறது பிடித்தால் வாழலாம் பிடிக்காவிட்டால் பிரியலாம் என்ற நிலை
வர வேண்டும்
திருமணமே வாழ்க்கை அல்ல என்ற மனம்
ஆண் பெண் இருவர் இடத்திலும் வரவேண்டும்
ஏனென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக மனம் மகிழ்ச்சியை மட்டுமே நாடிச்செல்லும்
மகிழ்ச்சி கிடைக்காத போது அந்த இன்பமான நேசம் கிடைக்காத போது
ஆயிரம் சொந்தங்கள் இருந்தென்ன
கோடிகள் குவிந்தென்ன
அத்தனையும்
பாழாகிவிடும்.
ஆகையால்
பிரிவதில் தவறில்லை என்ற மனநிலை வர வேண்டும்
என் தாய் திருமணமான மூன்று வருடங்களிலேயே பிரிந்து விட்ட ார் அப்போது அவர் சொன்ன வார்த்தை "வாழ்வதற்கு தானே வாழ்க்கை"
என்று அவ்வளவுதான் உறவினர்கள் கூட எவ்வளவோ கட்டாயப்படுத்தினார்கள் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை அவ்வளவுதான்.
ஆகையால் திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு ஒரு ஊருக்கு செல்லும் பயணம் மட்டுமே பிடிக்கவில்லை என்றால் அடுத்த பயணத்தை நோக்கி தான் செல்ல வேண்டும்
அது நமது கெத்து அல்ல!
பிம்பத்தில் வாழாமல் இன்பத்தில் வாழுங்கள்
அப்போதுதான் உண்மையான
வாழ்க்கையை
வாழ முடியும்!
சரி
உங்க பொண்ணு, உங்க மருமக, எத்தனை பவுனோட..
கருத்துகள்
கருத்துரையிடுக