இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நித்தமும் இன்பம் இருக்க சித்தத்தில் கவலை ஏன்?

 நித்தமும் இன்பம் இருக்க சித்தத்தில் கவலை ஏன்? இன்றைய காலகட்டத்தில் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அனைவரிடமும் எளிதில் சந்தித்து பேசுவதை போல் எளிதாக பேசமுடிகிறது இது ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித குலத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. ஆனால் இதுவே மக்களின் மனநிலை பாதிக்கப்பட்டு அதிக மனஅழுத்தம் ஏற்படுவதை காணமுடிகிறது. அதிகமான சண்டைகள் சச்சரவுகள் உருவாக்குகிறது பெரும்பாலானவர்கள் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் டிப்ரஷன் சம்பந்தமான வீடியோக்களை வைப்பதும் அதை யார் யார் பார்க்கிறார் என்று கவனித்துக் கொண்டிருப்பதும் நாம் நினைத்தவர் பார்க்க விட்டால் பெரும் மனம் கவலையடைவது கோபப்படுவது என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் பிறருக்கும் மன அழுத்தம் வர வேண்டுமா? நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று அதை பிறருக்கு தெரியப்படுத்துவதற்காகவே 'டிப்ரஷன்' என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டிருக்கிறோம்! நீங்கள் யாரை நினைத்து மன அழுத்தத்தில் இருப்பதை தெரியப்படுத்த நினைக்க...