இடுகைகள்

ஆர் ராஜ்குமார்

படம்
 எம் எஸ் சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை வேளாண் விஞ்ஞானி ஆர் ராஜ்குமார் அவர்களது 61வது அகவை தின பிறந்தநாள் விழா புதுக்கோட்டை தமிழ் சங்கம் மற்றும் மாவட்ட மைய நூலகம் இணைந்து பேக்கரி மகாராஜா மஹாலில் நடத்தியது விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அரங்கத்தில் ஒளிரும் வளர்மதி மாத இதழ் ராஜ்குமார் அவர்களது நேர்காணலில் பிரதிகளை இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.

வளர்மதி மாத இதழ் வெளியீட்டு விழா

படம்
        

புத்தகப் பிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் சில விஷயங்கள் என்ன.?

  புத்தகத்தை வாங்கும் முன்பு ,கடைசி அட்டைப் பக்கத்தில் ஆசிரியர் குறிப்பு மற்றும் அவரது புகைப்படத்தை தவறாமல் பார்ப்பது.நூலகத்திலிருந்து எடுத்த புத்தகமாக இருந்தால் ,யாராவது எந்த வரிகளிலாவது கோடிட்டு குறிப்பு எடுத்துள்ளர்களா? அந்த வரிகளை தேடிப் பார்ப்பது.படித்த புத்தகதிலிருந்த கதாபாத்திரங்களின் பெயர்கள் எங்காவது கேள்விப்பட்டால் உடனே அந்த புத்தகத்தை நினைவு கொள்வது.புத்தகத்தை வேக வேகமாக படித்து முடிக்கும் தருவாயில் அய்யோ புத்தகம் முடியப்போகிறதே ..இன்னும் கொஞ்சம் நீண்டால் என்ன என்று நினைப்பது.ஒரு நாவல் பிடித்து விட்டால் ,அந்த எழுத்தாளர் எழுதிய மற்ற நூல்களை தேடி தேடிப் படிப்பது.ஒரு புத்தகம் படிக்கும்போது ,"இந்த புத்தகம் படமாக வந்தால் நன்றாக இருக்கும் "என்று எண்ணுவதும்,அந்த புத்தகம் படமாக வந்த பின்னர் "இதை படமாக எடுக்காமல் இருந்திருக்கலாம் "என்று எண்ணுவதும் .ஒரு புத்தகம் படித்து வெகு நாளான பிறகு மீண்டும் அதே புத்தகத்தைப் படித்து மகிழ்வது.ஒரு வரியைப் படித்து முடித்த பின்பு,சிறிது நேரம் அந்த காட்சியைக் கற்பனை செய்துவிட்டு மீண்டும் தொடர்வது.ஒரு புத்தகம் படிக்கும்போது கனவில் அந...

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

படம்
அக்டோபர் 15 டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தலைமை உரையை கவிஞர் சிவகவி காளிதாஸ் அவர்கள் நிகழ்த்த கவிஞர் மணிவண்ணன் வரவேற்க  "என் வயது 15" நூலை  கவிஞர் கவின் பாரதியின் அறிமுகம் செய்ய  தன்னம்பிக்கை இளம் பேச்சாளர் டாக்டர் ஜனார்த்தனன் தன்னுடைய பள்ளி அனுபவம் முதல் தற்சமயம் உயர்நிலைக்கு வந்தது குறித்து மகிழ்ச்சியான தன்னம்பிக்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்து   காலம் தந்த கலாம்  என்ற தலைப்பில்  கவிஞர்  தங்க தமிழ்ச்செல்வி கவிஞர் சஸ்ரினா பிரித்தோஸ்  கவிஞர் பீ.முகமதுதாஹீர் ஆகியோரின் உரை வீச்சுடன்  "நிகழ்" இலக்கிய அமைப்பின்  நிறுவனர் சூர்யா சுரேஷ், புதுகை புதல்வன், பட்டிமன்ற பேச்சாளர் சிவநந்தினி,  கவிஞர் பீர் முகமது மற்றும் நண்பர்களது வாழ்த்துக்களை தொடர்ந்து   "கவிஞர் சூரியகாந்தி  கவிஞர் ஜோசப்ராயர், அப்துல் கலாம்" குறித்த கவிதை வாசிக்க, ஜோமன் பவுண்டேஷன் சார்பில் ஜோ.விஜய் அவர்கள் பிறந்த நாள் இனிப்பு வழங்கி அப்துல் கலாமுக்கும் தனக்கும் உண்டான நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொண்டார் அதைத்தொடர்ந...

திருமணம் எதற்காக?

திருமணம்தான் கெத்தா ? ********************************  இதில் ஒரு சில வரிகளில் பதில் சொல்லி புரிய வைத்தல் மிகவும் கடினம் முதலில் திருமணம் என்பது எதற்கு ? வம்சத்தை வளர்ப்பதற்காக? அல்லது  உங்களது பரம்பரை சொத்தை காப்பாற்றுவதற்காக? பரம்பரை பரம்பரையாக கட்டிக் காத்த சாதியை நிலை நாட்டுவதற்காக? இல்லை மனம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மட்டுமே! என்பதை உளவியல் ரீதியாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்! இருந்தாலும் சிறிய ஒரு உதாரணத்தை சொல்கிறேன்  என்னுடன் கல்லூரியில் படித்த வர்களின் எண்பது சதவீதம் பேர் மனம் முறிவுடன்  தான் வாழ்கின்றனர் மீதமுள்ள 20 சதவீதம் பேரும் ஆணோ பெண்ணா வேண்டா வெறுப்பாக தான் வாழ்கின்றனர் அதற்காக குடும்பம் வேண்டாம் என்று அர்த்தம் அல்ல   ஆடம்பரமாக திருமணம் செய்வது பிறருக்காகவே வாழ வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு ஆளாக வேண்டியது சூழ்நிலை உள்ளது திருமணம் என்ற பந்தத்தின் மூலமாக பெரும் வியாபாரமும், சாதிகளும் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது. நமது பண்பாடு கலாச்சாரம் கட்டிக் காக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் காலத்திற்கு ஏற்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களுடன்...

நித்தமும் இன்பம் இருக்க சித்தத்தில் கவலை ஏன்?

 நித்தமும் இன்பம் இருக்க சித்தத்தில் கவலை ஏன்? இன்றைய காலகட்டத்தில் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அனைவரிடமும் எளிதில் சந்தித்து பேசுவதை போல் எளிதாக பேசமுடிகிறது இது ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித குலத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. ஆனால் இதுவே மக்களின் மனநிலை பாதிக்கப்பட்டு அதிக மனஅழுத்தம் ஏற்படுவதை காணமுடிகிறது. அதிகமான சண்டைகள் சச்சரவுகள் உருவாக்குகிறது பெரும்பாலானவர்கள் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் டிப்ரஷன் சம்பந்தமான வீடியோக்களை வைப்பதும் அதை யார் யார் பார்க்கிறார் என்று கவனித்துக் கொண்டிருப்பதும் நாம் நினைத்தவர் பார்க்க விட்டால் பெரும் மனம் கவலையடைவது கோபப்படுவது என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது. உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் பிறருக்கும் மன அழுத்தம் வர வேண்டுமா? நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று அதை பிறருக்கு தெரியப்படுத்துவதற்காகவே 'டிப்ரஷன்' என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டிருக்கிறோம்! நீங்கள் யாரை நினைத்து மன அழுத்தத்தில் இருப்பதை தெரியப்படுத்த நினைக்க...