புத்தகப் பிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் சில விஷயங்கள் என்ன.?

  புத்தகத்தை வாங்கும் முன்பு ,கடைசி அட்டைப் பக்கத்தில் ஆசிரியர் குறிப்பு மற்றும் அவரது புகைப்படத்தை தவறாமல் பார்ப்பது.நூலகத்திலிருந்து எடுத்த புத்தகமாக இருந்தால் ,யாராவது எந்த வரிகளிலாவது கோடிட்டு குறிப்பு எடுத்துள்ளர்களா? அந்த வரிகளை தேடிப் பார்ப்பது.படித்த புத்தகதிலிருந்த கதாபாத்திரங்களின் பெயர்கள் எங்காவது கேள்விப்பட்டால் உடனே அந்த புத்தகத்தை நினைவு கொள்வது.புத்தகத்தை வேக வேகமாக படித்து முடிக்கும் தருவாயில் அய்யோ புத்தகம் முடியப்போகிறதே ..இன்னும் கொஞ்சம் நீண்டால் என்ன என்று நினைப்பது.ஒரு நாவல் பிடித்து விட்டால் ,அந்த எழுத்தாளர் எழுதிய மற்ற நூல்களை தேடி தேடிப் படிப்பது.ஒரு புத்தகம் படிக்கும்போது ,"இந்த புத்தகம் படமாக வந்தால் நன்றாக இருக்கும் "என்று எண்ணுவதும்,அந்த புத்தகம் படமாக வந்த பின்னர் "இதை படமாக எடுக்காமல் இருந்திருக்கலாம் "என்று எண்ணுவதும் .ஒரு புத்தகம் படித்து வெகு நாளான பிறகு மீண்டும் அதே புத்தகத்தைப் படித்து மகிழ்வது.ஒரு வரியைப் படித்து முடித்த பின்பு,சிறிது நேரம் அந்த காட்சியைக் கற்பனை செய்துவிட்டு மீண்டும் தொடர்வது.ஒரு புத்தகம் படிக்கும்போது கனவில் அந்த காட்சிகள் விரிவது.தான் வாசித்த புத்தகங்களை மற்றவருக்கு மிக அழகாக எடுத்துரைத்து ,பரிந்துரைப்பது.

புத்தகத்தை படிக்கும்போது தன்னை அதில் வரும் கதாபாத்திரத்தின் நிலையில் வைத்து கற்பனை செய்வது!
புதினமாக இருந்தால் தான் விரும்பிய முடிவு அமைந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நண்பர்களுடன் விவாதிப்பது…
பார்க்கும் பலரிடம் தான் படித்து மகிழ்ந்த புத்தகத்தை அறிமுகம் செய்வது…
தான் வாசிக்கும் அதே எழுத்தாளர் அல்லது அதே புத்தகத்தை வாசிக்கும் மற்றொரு முகம் தெரியாத நபரை சந்தித்தால் கூட அங்கு அந்நியம் மறைந்தது உடனடியாக அந்த புத்தகத்தின் கதைக்குள் சென்றுவிடுவது..
எங்காவது நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது புதிய இடங்களுக்கு சென்று, அங்கு ஒருவேளை அலமாரியில் தான் வாசித்த புத்தகத்தை கண்டுவிட்டால் உடனடியாக அதைப்பற்றி பேசுவது…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நித்தமும் இன்பம் இருக்க சித்தத்தில் கவலை ஏன்?