இடுகைகள்
நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
புத்தகப் பிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் சில விஷயங்கள் என்ன.?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
புத்தகத்தை வாங்கும் முன்பு ,கடைசி அட்டைப் பக்கத்தில் ஆசிரியர் குறிப்பு மற்றும் அவரது புகைப்படத்தை தவறாமல் பார்ப்பது.நூலகத்திலிருந்து எடுத்த புத்தகமாக இருந்தால் ,யாராவது எந்த வரிகளிலாவது கோடிட்டு குறிப்பு எடுத்துள்ளர்களா? அந்த வரிகளை தேடிப் பார்ப்பது.படித்த புத்தகதிலிருந்த கதாபாத்திரங்களின் பெயர்கள் எங்காவது கேள்விப்பட்டால் உடனே அந்த புத்தகத்தை நினைவு கொள்வது.புத்தகத்தை வேக வேகமாக படித்து முடிக்கும் தருவாயில் அய்யோ புத்தகம் முடியப்போகிறதே ..இன்னும் கொஞ்சம் நீண்டால் என்ன என்று நினைப்பது.ஒரு நாவல் பிடித்து விட்டால் ,அந்த எழுத்தாளர் எழுதிய மற்ற நூல்களை தேடி தேடிப் படிப்பது.ஒரு புத்தகம் படிக்கும்போது ,"இந்த புத்தகம் படமாக வந்தால் நன்றாக இருக்கும் "என்று எண்ணுவதும்,அந்த புத்தகம் படமாக வந்த பின்னர் "இதை படமாக எடுக்காமல் இருந்திருக்கலாம் "என்று எண்ணுவதும் .ஒரு புத்தகம் படித்து வெகு நாளான பிறகு மீண்டும் அதே புத்தகத்தைப் படித்து மகிழ்வது.ஒரு வரியைப் படித்து முடித்த பின்பு,சிறிது நேரம் அந்த காட்சியைக் கற்பனை செய்துவிட்டு மீண்டும் தொடர்வது.ஒரு புத்தகம் படிக்கும்போது கனவில் அந...