நித்தமும் இன்பம் இருக்க சித்தத்தில் கவலை ஏன்?
நித்தமும் இன்பம் இருக்க சித்தத்தில் கவலை ஏன்?
இன்றைய காலகட்டத்தில் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அனைவரிடமும் எளிதில் சந்தித்து பேசுவதை போல் எளிதாக பேசமுடிகிறது இது ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித குலத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. ஆனால் இதுவே மக்களின் மனநிலை பாதிக்கப்பட்டு அதிக மனஅழுத்தம் ஏற்படுவதை காணமுடிகிறது. அதிகமான சண்டைகள் சச்சரவுகள் உருவாக்குகிறது பெரும்பாலானவர்கள் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் டிப்ரஷன் சம்பந்தமான வீடியோக்களை வைப்பதும் அதை யார் யார் பார்க்கிறார் என்று கவனித்துக் கொண்டிருப்பதும் நாம் நினைத்தவர் பார்க்க விட்டால் பெரும் மனம் கவலையடைவது கோபப்படுவது என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது.
உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் பிறருக்கும் மன அழுத்தம் வர வேண்டுமா?
நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று அதை பிறருக்கு தெரியப்படுத்துவதற்காகவே 'டிப்ரஷன்' என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டிருக்கிறோம்!
நீங்கள் யாரை நினைத்து மன அழுத்தத்தில் இருப்பதை தெரியப்படுத்த நினைக்கிறீர்களோ அதை வைத்து பிறர் பார்த்துவிட்டு அவர்களும் மன அழுத்தத்தில் ஆளாகிறார்கள் உங்களுக்கு ஏன் இந்த ஒரு ஆசை!
ஆனால் டிப்ரஷன் வீடியோ ஸ்டேட்டஸ் வைத்து நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் அதை பார்த்துக் கொண்டு அவர்கள் மிக கவலை அடைகிறார்கள்!
இது எப்படி இருக்கிறது என்றால் நான் கவலைப்படுகிறேன் நீங்கள் சந்தோஷமாக இருக்கலாமா? அல்லது நீ சந்தோஷமாகவா இருக்கிறாய் நான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பது போல் காண்பித்துக் கொள்வது! மாணவர்கள் நான் படிக்கவில்லை என்று சொல்வார்கள் ஏனென்றால் அவன் முதல் மார்க் வந்து விடக்கூடாது என்பதற்காக நான் படிக்கவில்லை படிக்கவில்லை என்று சொல்லிவிட்டு அவர்கள் தேர்வில் முதல் ஆளாக வந்து விடுவார்கள் அது போன்று நீங்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்கள் இருக்கிறது!
யாருக்கு தான் மனக் கவலையில்லை கோடீஸ்வரனுக்கும் மனக்கவலையிருக்கிறது தெரு கோடியில் இருப்பவருக்கும் மனக்கவலை இருக்கிறது சின்ன குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனக் கவலையில் தான் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலை இருக்கிறது.
உலகத்தில் கவலை இல்லாத மனிதன் யாராவது இருக்கிறாரா?
நன்றாக சிரித்து கொண்டிருப்பார் அவரிடம் தனிமையில் அவருடைய வாழ்க்கை விஷயங்களை பற்றி கேட்டால் உங்களுக்கு கண்ணீர் வரும் வரை அவர் விடவே மாட்டார் அந்த அளவு கதைகளையும், தான் கடந்து வந்த பாதைகளையும், தான் அனுவித்துக் கொண்டிருக்கிற வேதனைகளையும், உங்களிடம் சொல்லுவார். அப்படி இருக்கும்போது கவலை என்பது நம் எண்ணத்தில் உருவாகிற ஒரு அலை! ஆனால் அதையெல்லாம் பெரிதுபடுத்திக் கொண்டே இருந்தால் மனிதனின் வாழ்க்கை என்னாவது கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
அதிகாரிகள் திட்டினால் கவலைப்படுவது, ஆசிரியர்கள் திட்டினால் கவலைப்படுவது,
பேருந்தில் சில்லறை இல்லை என்று நடத்துனர் திட்டினாலும் கவலைப்படுவது,
நண்பன் டீ கடைக்கு செல்லும் போது டீ குடிக்க கூப்பிடவில்லை என்றால் கூட கவலைப்படுவது.
திரைப்படத்திற்கு செல்லவில்லை என்றாலும் கவலைப்படுவது, பார்த்த திரைப்படம் சரியில்லை என்றாலும் கவலைப்படுவது, ஐந்து நிமிடம் whatsapp இயங்கவில்லை என்றாலும் கவலைப்படுவது, அடுத்த வீட்டுக்காரன் அழகான செடிகளையும் வளர்த்தாலும் கவலைப்படுவது,
கார் இல்லையே என்று கவலைப்படுவது, கார் வாங்கினால் காரில் ஏசி இல்லை என்று கவலைப்படுவது, ஏசி இருந்த கார் வாங்கினாலும் அதைவிட உயர்ந்த கார் இல்லையே என்று கவலைப்படுவது, இப்படி கவலைப்படுவதற்கான காரணத்தை அடுக்கிக் கொண்டே செல்லலாம்
நீங்கள் அஞ்சியே பொய்யே பேசி உண்மையான வாழ்க்கை வாழ முடியாமல் போய்விடும் எதற்கு கவலைப்பட வேண்டும்! எதற்கு அஞ்ச வேண்டும் !
தினமும் கவலைப்படுவதற்கு என்று ஒரு காரணத்தை தேடிக் கொண்டே இருக்கலாமா?
ஆனால் மகிழ்ச்சிக்கான காரணத்தை நாம் ஏன் தேடுவதில்லை?
அப்படி என்றால் இன்றைய தொலைபேசி சாதனம் நமக்கு கவலையும் சச்சரவையும் தருகிறது என்று அர்த்தம் அல்ல அதில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுக்கான தளத்தை அமைப்பதற்கான வழிமுறைகளும் அதில் இருக்கின்றன நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய செய்திகளும் இருக்கின்றன. அதையெல்லாம் தேடி புதிய புதிய சிந்தனைகளை மக்களிடத்தில் கவலைகளை மறக்கும் வண்ணம் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!
இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி அனைத்தையும் கொடுத்து விடுகிறது இன்பத்தையும் கொடுக்கிறது. துன்பத்தையும் கொடுக்கிறது. நாம் துன்பத்தை அதிகமாக தேடாமல் இன்பத்தையே நாடி மகிழ்ச்சியான செய்திகளையும் ஆக்கப்பூர்வமான செய்திகளையும் கட்டுரைகளையும் வீடியோக்களையும் கண்டு மனதை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கலாம்!
என் தலைவிதி இப்படி இருக்கேன் நான் தனிமையில இருக்கேன் என்ன பண்றது எனக்கு மட்டும் ஏன் இறைவன் இந்த கஷ்டத்தை கொடுத்து இருக்கான் என்று சொல்லி நொந்து புலம்புவதை நாம் அதிகம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் இறுதியில் இந்த கவலையானது யாரிடமும் பேசாமல் தனிமைக்கு சென்று தற்கொலையை தூண்டும் அளவிற்கு செய்கிறது ஆகையால் கவலைப்படுவதற்கு காரணத்தை தேட வேண்டாம். மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிமுறைகளை தேடுங்கள்.
இந்த இடத்தில் பாரதியின் வரிகளை நீங்கள் எண்ணி பாருங்கள்
"நெஞ்சில் கவலையை நிதமும் பயிராக்கி அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை"
"எத்தனை
கோடியின்பங்கள் வைத்தாய் -எங்கள் இறைவா இறைவா இறைவா"
"துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம் இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்"
"வியனுலகத்தினையும் அமுதென நுகரும் வேதவாழ்வினைக் கைப்பிடித்தோம்"
செல்வந்தர் ஒருவர் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புது கார் வாங்கி இருந்தார் வீட்டின் முன் பகுதியில் சாலை ஓரமாக நின்று இருந்தது அந்த வழியாக வந்த டூ வீலர் தடுமாறி இந்த வண்டியின் மீது சிறிது உராய்வு ஏற்படுத்தி மிக வேகமாக சென்றது அதை தொலைவில் பார்த்து கொண்டு இருந்த அவரது நண்பர் அவனை வளைத்து அருகில் இருந்த மக்களும் சேர்ந்து தாக்க அந்த செல்வந்தர் வேகமாக வந்து அவனை பாதுகாத்து தம்பி பார்த்து வண்டி ஒட்டுப்பா என அவனை மிக கனிவாக பேசி அனுப்பி வைத்தார். அருகில் இருந்த அனைவரும் 50 லட்சம் கார் எப்படியும் தங்களுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்ன அப்படி அனுப்பி விட்டீர்கள்! என்று அவரை திட்டினர் அதற்கு அவர் சிரித்துக் கொண்டே 50 லட்சம் ரூபாய் கார் வாங்கினேன் அதை இன்சூரன்ஸ் காரன் பார்த்துக் கொள்வான் இவன் வேண்டுமென்றே இடிக்கவில்லை தடுமாறி விழுந்து விட்டான் அதற்கு என்ன செய்வது இவனை அடித்தால் கார் சரியாகிவிடுமா அல்லது அவனால் தான் அந்த பணத்தை கொடுக்க முடியுமா அப்படி வாங்கினாலும் எனக்கு அது மகிழ்ச்சியாக இருக்குமா இருக்காது இப்போது இவனை மன்னித்ததன் மூலம் எனக்கும் மகிழ்ச்சி அவனும் என்னை வாழ்த்தி விட்டு மகிழ்ச்சியாக செல்வான்! மகிழ்ச்சியாகவே வாழ்வோம் மனிதனை புரிந்து கொள்வோம் என்று அவர்களுக்கு சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்றார்.
இதுபோன்று பெரிய நிகழ்வாக இருந்தாலும் சின்ன பிரச்சினையாக இருந்தாலும் அதற்கான வழிமுறைகளும் தீர்வுகளும் உங்களிடத்தில் இருக்கிறது. அதை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும்!
நம் தினமும் கவலையை தேடுவதை கவலைப்படுவதற்கு காரணத்தை தேடுவதை விட்டு சந்தோஷப்படுத்துவதற்கான மகிழ்ச்சிக்கான காரணங்களை தேடி சென்றால் நிச்சயமாக நமக்கு மனதில் சந்தோஷம் கிடைக்கும் இறைவனிடம் நாம் வேண்டுகிறோம் எனக்கு இவ்வளவு கொடுமைகள் நடந்து விட்டது என் உறவினர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள் எனது நண்பன் எனக்கு துரோகம் செய்து விட்டான் இப்படி புலம்புவதை தவிர்த்து அவன் ஒரு காலத்தில் உங்கள் நண்பன் உங்கள் நம்பிக்கைக்குரியவன். அவர்கள் ஒரு காலத்தில் உங்கள் உறவினர்கள் உங்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் ஏதோ ஒரு சிறு தவறினால் அப்படி நடந்திருக்கலாம்
அதையே நினைத்து மனம் வருந்தி இருப்பதால் என்ன பயன்?
அதை கடந்து செல்லுங்கள் புதிய நண்பர்கள் உருவாவார்கள் புதிய உறவினர்கள் சேருவார்கள். கேளுங்கள் இறைவனிடம் உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் வேண்டாதவர்களை பற்றி விட்டுத்தள்ளுங்கள் அவர்களைப் பற்றிய சிந்தனைகளை புறந்தள்ளி உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ கேட்பதை மிகப்பெரியதாக கேளுங்கள் நிச்சயம் அந்த காளி தேவி உங்களுக்கு அள்ளித் தருவாள்!
நம்மளுடைய புலம்பலை சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் இறைவனிடம் வேண்டும்போது எனக்கு மகிழ்ச்சியை கொடு சந்தோஷத்தை கொடு எனக்கு இன்பமான வாழ்க்கையும் கொடு என்று கேட்டுப்பாருங்கள் அவள் அள்ளி அள்ளி கொடுக்க தயாராக இருக்கிறாள் இயற்கையானது நீங்கள் கேட்கிறதை கொடுக்கிறது துன்பத்தையே நினைத்து வாடிக் கொண்டிருந்தால் துன்பம் அதிகரிக்கும் இன்பத்தையே நினைத்துக் கொண்டிருந்தால் இன்பம் உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் குடியிருக்கும் என்று சொல்லி நித்தமும் எங்கும் எதிலும் இன்பத்தையே காணுங்கள் மனதை எப்போதும் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் நம்மை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது விண்ணுலகத்தில் சென்று அமுத வாழ்வு என சொல்லும் வாழ்க்கையை நீங்கள் இப்புவியிலும் சிறப்பான வாழ்க்கை வாழலாம் கவலைப்படுவதற்கான காரணத்தை தேடாதீர்கள் சிறு சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் கவலைகள் உங்களை தொற்றிக் கொள்ளும் அதற்கு இடம் கொடுக்காமல்
எங்கு நோக்கினும் கோடான கோடி மகிழ்ச்சி கொட்டி கிடக்கின்றன கொஞ்சம் குழந்தையின் உள்ளத்திலும் இருக்கின்றன கொட்டும் அருவிகளும் இருக்கின்றன இயற்கை அன்னை நமக்கு அளப்பரிய சந்தோசங்களையும் மகிழ்ச்சிகளையும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன அதையெல்லாம் எண்ணி கண்டு களித்து எப்போதும் துயரக் கடலில் மூழ்கிவிடாமல் மகிழ்ச்சி என்னும் வெள்ளத்தில் நீந்திச் செல்லுங்கள்!
பாரதியின் வாக்கின்படி
இன்பமாய் வாழ மனதை பக்குவப்படுத்தி மகிழ்ச்சியான அவர்களுடன் பழகி நல்ல உற்சாகமுள்ள கவிதைகளையும் கவி நயங்களையும் கண்டு களித்து இன்பமாய் வாழ்வோம்
கற்றுக் கொள்வோம் நன்றி!
கருத்துகள்
கருத்துரையிடுக